தடுப்பு மருந்து உருவாக்குவதற்கான போட்டியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன
Geneva: உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர், கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பரவலாக அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரையான காலத்தினை எடுத்துக்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.63 கோடியை கடந்திருக்கக்கூடிய நிலையில், தடுப்பு மருந்து உருவாக்குவதற்கான போட்டியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை தடுப்பூசி சர்வதேச அளவில் பரவலாக்கப்படுவதற்கான காலத்தினை எடுத்துக்கொள்ளும் என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் ஜெனீவாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
அதே போல தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான சோதனைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி பரிசோதனையில் மூன்றாம் கட்டம் அதிக காலத்தினை எடுத்து மிகச்சரியான தீர்வினை வழங்கும் தடுப்பூசியாக வெளிவர வேண்டுமென விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)