This Article is From Aug 28, 2018

கணவரை பிரிந்து பெற்றோருடன் சென்ற பெண்ணால் உச்ச நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!

விசாரணையில், தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக அஞ்சலி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கணவரை பிரிந்து பெற்றோருடன் சென்ற பெண்ணால் உச்ச நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!
New Delhi:

புதுடில்லி: சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி ஜெயின் என்பவரும், மொகமத் இப்ராஹிம் என்பவரும் காதலித்து வந்தனர்.

காதலியை திருமணம் செய்ய, இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்துவாக மாறியுள்ளார் இப்ராஹிம். மேலும், தனது பெயரை ஆர்யா என மாற்றிக் கொண்டுள்ளார். எனினும், அஞ்சலியின் பெற்றோர் இவர்களின் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.

இதனால், கடந்த பிப்ரவரி மாதம், வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள், ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம், ரகசிய திருமணத்தை குறித்து அஞ்சலியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. அப்போது வீட்டை விட்டு வெளியேற முயற்சித்த அஞ்சலியை அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்யா என்கிற இப்ராஹிம், வலுகட்டாயமாக தனது மனைவியை அழைத்து சென்றதாக கூறி அஞ்சலியின் பெற்றோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வழக்கை விசாரித்த உச்ச் நீதிமன்றம், அஞ்சலியை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனை அடுத்து, நேற்று நடைப்பெற்ற விசாரணையில், தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக அஞ்சலி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18வயது கடந்த மேஜர் என்பதால், விருப்பத்தின்படி முடிவெடுக்க அஞ்சலிக்கு உரிமையுள்ளது என்று கூறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

.