Read in English
This Article is From Sep 07, 2018

710 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது - ரயில்வே அமைச்சர்

இந்தியாவில் உள்ள 710 ரயில் நிலையங்களுக்கு வைஃபை வசதியை ஏற்படுத்தியுள்ளதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்

Advertisement
இந்தியா
New Delhi:

இந்தியாவில் உள்ள 710 ரயில் நிலையங்களுக்கு வைஃபை வசதியை ஏற்படுத்தியுள்ளதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே நல்ல வேகத்துடன் இந்த வைஃபை சேவை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து பயன்பாட்டில் தகவல் தொழில் நுட்பத்தின் தேவை பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆன்லைனில் எடுக்கப்படும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களின் எண்ணிக்கை 2014-2015 ஆண்டில் 195-ல் இருந்து கடந்த ஆண்டு 67000 ஆக உயர்ந்துள்ளது என்றார். இது முன்று ஆண்டுகளில் 35000% அதிகம் என்றார் அவர்.
ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் மூலம், நாட்டில் ஓடும் 22,000 ரயில்களை டிராக் செய்யவும், தரவுகளை பெற முடியும் என்றார்.

ரயிலேயில் இப்போது 4,44,000 டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் செலவும் அதிகரிக்கிறது. எனவே சில டெண்டர்களை இணைத்து, டேட்டா மைனிங் மூலம் கொள்முதல் செய்வதை சீர் படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரிய அமைப்பான ரயில்வேயில் தொழில் நுட்பங்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளதாகவும், ரயிவேயில் உள்ள இளைஞர்களும், தனியாரில் உள்ள இளைஞர்களும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கொண்டு வரவேண்டும் என்றார்.

Advertisement