"அமெரிக்க நீதிபதி, விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் ஏதோ தவறு நடந்துள்ளது" என்றார்
Washington: 'அமெரிக்காவில் 2010ம் ஆண்டு வெளியான அதிக தகவல்களை கொண்ட ஆவணங்களை வெளியிட்டதன் பின்னணியில் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இருந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டி அமெரிக்கா வழக்கு பதிவு செய்துள்ளது' என்று விக்கி லீக்ஸ் அறிவித்துள்ளது.
கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத வழக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் மீது பதியப்பட்டுள்ளதாக விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது. இது எந்த மாதிரியான வழக்கு என்று எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
"அமெரிக்க நீதிபதி, விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் ஏதோ தவறு நடந்துள்ளது. இதற்கும் அசாஞ்சேவுக்கும் சம்பந்தமில்லை" என்றார். அதில் தவறுதலாக அசாஞ்சே பெயர் இடம்பெற்றதாக விக்கிலீகஸ் கூறியுள்ளது.
ஆனால் அமெரிக்க அட்டர்னி கெலன் இதனை மறுத்துள்ளார். அசாஞ்சே மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்படும் வரை இந்த வழக்கில் வேறு எதுவும் கூற முடியாது என்று கூறியுள்ளார்.