This Article is From Aug 12, 2020

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா? எல்.முருகன் சூசக பதில்!

இந்திய அளவில் பிரபலமானவர் கனிமொழி, அவரிடம் விமான நிலையத்தில் எந்த அதிகாரியும் இது போன்று விசாரித்திருக்க வாய்ப்பில்லை.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா? எல்.முருகன் சூசக பதில்!

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சூசகமாக பதிலளித்துள்ளார். 

முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தில் கடந்த வாரம் வரை திமுக - அதிமுக என்ற நிலை இருந்தது. ஆனால், திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாஜகவுக்கு வந்ததும், தற்போது திமுக - பாஜக என்ற நிலை உருவாகியுள்ளது. நிச்சயமாக எங்கள் தலைமையிலான கூட்டணி தான் நாங்கள் இருக்கின்ற பக்கம் தான் வெற்றி பெறும். 

பாஜக தலைமையிலான கூட்டணி தான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும் என்றார். ஏற்கனவே அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற உட்கட்சி குழப்பம் நிலவி வருகிறது. அப்படி இருக்க, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருக்கும் போது, வி.பி.துரைசாமியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் வி.பி.துரைசாமியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்து வி.பி.துரைசாமி கூறியதை பாஜகவின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. பாஜக தலைவர் எல்.முருகன் அப்படி கூறினாரா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

Advertisement

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறும்போது, தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறி வருகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் வி.பி.துரைசாமி அப்படி கருத்து கூறியுள்ளார். தமிழகத்தில் இனி திமுக - பாஜகவுக்கு தான் போட்டி. அதேசமயம் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்றும் அவர் சூசகமாக கூறியுள்ளார். 

மேலும் பேசிய அவர், இந்திய அளவில் பிரபலமானவர் கனிமொழி, அவரிடம் விமான நிலையத்தில் எந்த அதிகாரியும் இது போன்று விசாரித்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் செய்வதற்காக இதுபோன்ற கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார் என்றும் கூறினார். 

Advertisement