This Article is From Feb 21, 2019

‘அதிமுக-வுடன் கூட்டணி ஏன்?’- பதிலளிக்க நாள் குறித்த அன்புமணி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பெறுவது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.

‘அதிமுக-வுடன் கூட்டணி ஏன்?’- பதிலளிக்க நாள் குறித்த அன்புமணி

அதிமுக கூட்டணியில், பாமக-வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

ஹைலைட்ஸ்

  • அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளன
  • பாமக-வுக்கு கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • பாஜக-வுக்கு கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பெறுவது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில், பாமக-வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திராவிடக் கட்சிகளை பாமக-வின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். குறிப்பாக அதிமுக-வை தினம் தினம் அறிக்கை வெளியிட்டு விமர்சனம் செய்து வந்தார் ராமதாஸ். 

அதிமுக-வின் வரலாறு குறித்தும் சமீபத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டார் ராமதாஸ். இப்படிப்பட்ட சூழலில் வரும் மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக-வுடன் பாமக கூட்டணி வைத்திருப்பது பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. 

இந்நிலையில் இன்று சேலத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அன்புமணி, ‘அதிமுக-வுடன் கூட்டணி வைத்தது குறித்து எழும் கேள்விகளுக்கு வரும் திங்கள் கிழமை சென்னையில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பதில் அளிக்கப்படும்' என்றார். உடனே ஒரு பத்திரிகையாளர், ‘அதிமுக-வுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளதால் விமர்சனம் எழுந்துள்ளதே?' என்றார். 

அதற்கு அன்புமணி, ‘விமர்சனங்கள் வரத்தான் செய்யும்' என்று கூறிவிட்டு சடசடவென நடையைக் கட்டினார். 

அதிமுக-வுடன் பாமக கூட்டணி வைத்த பிறகு, ராமதாஸ் மற்றும் அன்புணி கடந்த சில மாதங்களாக தமிழக அரசுக்கு எதிராக சொல்லிய கருத்துகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். பாமக-வை கேலி செய்து இணையத்தில் மீம்ஸ்களும் பறந்தன. 

.