Read in English
This Article is From May 20, 2019

மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் திமுக அங்கம் வகிக்குமா? : மு.க.ஸ்டாலின் பதில்

மத்தியில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசில் திமுக அங்கம் வகிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கும் ஸ்டாலின் பதில் அளித்திருக்கிறார்.

Advertisement
இந்தியா Written by

தமிழகத்தில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

கருத்துக்கணிப்பு முடிவுகளை திமுக பொருட்படுத்தாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு நிறைவுபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜக 302 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பான்மையான கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகதான் மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அரசியல்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கருத்துக்கணிப்புகளின் தமிழக நிலவரம் உண்மையானது அல்ல என்று கூறியுள்ளார். 

தமிழக நிலவரம் திமுகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் அதுபற்றி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- 
கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளவோ பொருட்படுத்தவோ மாட்டோம். இன்றும் 3 நாட்களில் மக்களின் கணிப்பு என்னவென்று தெரிந்து விடும்.  
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மத்தியில் புதிதாக அமையும் அரசில் திமுக அங்கம் வகிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 23-ம்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிப்போம் என்று பதில் அளித்தார். 

Advertisement