ஃபேஸ்புக்கின் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க் தனது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கியுள்ளார். (File)
ஃபேஸ்புக்கின் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க் தனது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கியுள்ளார். குடியரசு கட்சிக்கு ஆதரவான ஒரு நிறுவனத்தை வாங்கியதாக எழுந்த சர்ச்சையையடுத்து அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதாக அறிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் தனது ஆய்வுகளுக்காக ஒரு நிறுவனத்தை வாங்கியது. அது குடியரசு கட்சிக்கு தொடர்புடையது என்ற விமர்சனம் எழுந்தது. இந்தச் சர்ச்சை ஆரம்பித்தவுடன் இதுகுறித்து ஷெரிலிடம் கருந்து கேட்கப்பட்டது. அதற்கு "அப்போது எங்களுக்கு தெரியாது" என்று தெரிவித்திருந்தார்.
'டிஃபைனர்ஸ்' எனும் நிறுவனத்தை ஆரம்பத்தில் பெரிதாக தெரியாது. அவர்களிடம் ஒரு சில மெயில்கள் மட்டுமே வந்திருந்தன. அதனால் தனது அலுவலகர்களிடம் இந்த நிறுவனம் குறித்து விளக்கம் கேட்டுள்ளார் ஷெரில் சான்ட்பெர்க். மேலும் அதுகுறித்து இருகட்ட பரிசீலனை செய்யவும் கோரியுள்ளார்.
"இதற்கு முழுமையான பொறுப்பை எங்கள் செய்தி தொடர்பு நிறுவனமும், தகவல் தொடர்பு நிறுவனமும் தான் ஏற்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன்" என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே இந்த சமூக வலைதளத்தின் மீது அமெரிக்க தேர்தலின் போது டேட்டாக்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஃபேஸ்புக்கின் வெளியுறவு கொள்கை அதிகாரி எலியாட் சார்ஜ் என்பவர் தான் டிபைனர்ஸ் நிறுவனத்துக்கும் ஃபேஸ்புக்கிற்குமான விவரங்களை வெளியிட்டார். இதில் அவர் கூறியிருப்பதாவது ''செய்திகளை ஒருங்கிணைக்கவும், நிருபர்களுக்கு தகவல்களை தரவும் தான் இந்த நிறுவனத்தை வாங்கினோம். ஆனால் இந்த நிறுவனத்தின் நோக்கம் வேறாக இருப்பதாக தெரிய வந்தது. அதற்காக நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன்''.
மேலும் "இது பொறுப்பற்ற செயல்பாடு. மற்றும் பின்னணியை விசாரிக்காமல் செய்த தவறு" என்று சார்ஜ் தெரிவித்துள்ளார்.
"இந்தச் சர்ச்சைகளால் ஷெரிலின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். "இந்த தவறுக்காக அவரை நீக்க முடியாது. அவர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக 10 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார். அவரது வேலையை நான் மிகவும் மதிக்கிறேன். இது ஒரு செய்தி தொடர்பு நிறுவனத்துடனான பிரச்னை அதனை விரைவில் சரிசெய்வோம்" என்று கூறியுள்ளார். இந்த நிறுவனத்திடமிருந்து விலகியதால் ஃபேஸ்புக் பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளன.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)