This Article is From Mar 05, 2019

எதிரியின் எல்லைக்குள் புகுந்து அழிப்பதே நமது ஸ்டைல்! - பிரதமர் மோடி

எதிரியின் எல்லைக்குள் புகுந்து தாக்குவதே நமது வழக்கம்.. இதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவும் பிடிக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

தகுந்த பதிலடி கொடுப்பது எனது இயல்பு என மோடி தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • எதிரியின் எல்லைக்குள் புகுந்து தாக்குவதே எங்கள் வழக்கம்.
  • நாட்டின் பாதுகாப்பே எனது ஒரே கவலை.
  • தாக்குதல்களை அரசயிலாக்க வேண்டாம் என எதிர்கட்சிகள் வலியுறுத்தல்.
Ahmedabad:

பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி ஒரு வாரம் கடந்த நிலையில், பயங்ரவாதிகள் எங்கு மறைந்திருந்தாலும், அவர்கள் விட்டு வைக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த 13 நாட்களுக்குள், பாகிஸ்தானின் பாலகோட் மலை உச்சியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது, இந்திய போர் விமானங்கள் பதில் தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாத முகாமில் இருந்த 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அகமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, தகுந்த பதிலடி கொடுப்பது எனது இயல்பு, எதிரிகள் பூமிக்கு அடியில் மறைந்திருந்தாலும், அவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவார்கள்.

எதிரியின் எல்லைக்குள் புகுந்து தாக்குவதே நமது வழக்கம்.. இதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவும் பிடிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெறுவதற்காக விமானப்படை தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டி வரும் எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நிகழ்ந்த போது எதுவும் தேர்தல் நடைபெற்றதா? தீவிரவாதத்தால் நாம் கடந்த 40 வருடங்களாக பாதிக்கப்பட்டு வருகிறோம். நான் அதிகாரம் குறித்து கவலை கொண்டது இல்லை, என்னுடையே ஒரே கவலை நாட்டின் பாதுகாப்பு மட்டுமே.

கடந்த 2016ஆம் ஆண்டு உரி தாக்குதல் நடந்தது போது, நமது படைகள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. தற்போது புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியதே அரசிற்கும் எதிர்கட்சிகளுக்கும் பெரும் பேசு பொருளாக உள்ளது.

பாஜகவின் எடியூரப்பா, மனோஜ் திவாரி போன்றவர்களின் நடவடிக்கையால் எதிர்கட்சிகள் கடும் குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த வாரம் ராணுவ உடையில் மனோஜ் திவாரி தேர்தல் பிரசாரம் செய்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதேபோல், விமானப்படை தாக்குதல் நடத்திய பின்னர் பாஜக எத்தனை தொகுதிகள் வெற்றி பெறும் என்று கருத்து கூறிய எடியூரப்பாவும், கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இதனிடையே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பாலக்கோட் தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர், இதேபோல், காங்கிரஸ் கபில் சிபால், திங் விஜயசிங் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தியதற்கான ஆதராத்தை வெளியிடக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

 

மேலும் படிக்க - "தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும்"

.