Read in English
This Article is From Dec 11, 2018

‘மூன்று மாநிலங்களிலும் ஆட்சி அமைப்போம்’ - காங்கிரஸ் நம்பிக்கை!

‘நாங்கள் கண்டிப்பாக ஆட்சியைப படிப்போம் ’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி அபிஷேக் மானு சிங்வி கூறினார்.

Advertisement
இந்தியா
New Delhi:

ராஜஸ்தானில் நான்கு மணி நேர வாக்கு எண்ணிகைக்குப் பிறகு, பாஜக-வை விட அதிகப்படியான தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் முன்னிலை வகித்து ஆட்சியை கைபற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

‘நாங்கள் கண்டிப்பாக ஆட்சியைப படிப்போம், சிறியளவு வாக்கு வத்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்' என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி அபிஷேக் மானு சிங்வி கூறினார்.  

சத்தீஸ்கரில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் மாயாவதி-அஜித் ஜோகி கூட்டணி கட்சிகளுகிடையே பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

Advertisement

‘பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், சத்தீஸ்கரில் உள்ள மூன்றாம் கூட்டணி எங்களுக்கு ஆதரவளிக்கும்' என சிங்வி தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில், பெரும்பான்மையை நிரூபிக்க 45 தொகிதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க-வும், 6 தொகுதகளில் மாயாவதி-அஜித் ஜோகி கூட்டணி கட்சியும் முன்னிலையில் உள்ளன. 

Advertisement

மிசோரம் மற்றும் தெலங்கானாவில் மோசமான பின்னடைவை காங்கிரஸ் சந்தித்துள்ளது.

Advertisement