Read in English
This Article is From Oct 07, 2018

ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் : 2019 பொதுத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பாரா லாலு?

பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள லாலுவுக்கு 4 முதல் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இவரது ஜாமீனை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளது சிபிஐ.

Advertisement
இந்தியா

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 6 வழக்குகளில் சிக்கியுள்ளார் லாலு.

Patna:

2019 பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், பீகாரில் முக்கிய கட்சியாக இருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நிலைமை பரிதாபத்தில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளனர்.

இதில் முக்கிய வழக்கான ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல் முறைகேடு வழக்கில் தேஜஸ்வி மற்றும் ராப்ரி தேவி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் ஏதும் கிடைக்கவில்லை. மாட்டுத் தீவன முறைகேடு தொடர்பான வழக்கில் மாட்டிக் கொண்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார்.

லாலுவுக்கு எதிரான மற்ற 5 வழக்குகளில் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கிடைத்து விட்டால், அவர் மக்களவை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

Advertisement

மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் லாலுவுக்கு 4 முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஜாமீன் வழங்கவே கூடாது என்று, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தை சிபிஐ அதிகாரிகள் அணுகியுள்ளனர். நேற்று இந்த வழக்குகளில் 3 வழக்குகள் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மறுக்கப்பட்டு விட்டது. தற்போது உச்சநீதிமன்றத்தில் லாலுவின் தரப்பில் ஜாமீன் கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லாலுவின் வழக்கறிஞர் கூறும்போது, லாலு பிரசாத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை பரோலில் விடுவித்தால் மட்டுமே அவர் வெளியே வர முடியும். அப்படி வெளியே வந்தாலும், ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதிக்கும். குறிப்பாக அவர் மக்களவை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வதை நீதிமன்றம் அனுமதிக்காது என்றார்.

Advertisement
Advertisement