This Article is From Nov 26, 2018

"வாழ்நாளில் ரணிலை பிரதமராக ஏற்க மாட்டேன்" - இலங்கை அதிபர் சிறிசேனா!

மத்திய வங்கி ஊழல், ரணில் பதவியேற்று 3 மாதத்தில் வெளியானது என்றும் நாட்டுக்கு ஊழலற்ற அரசை வழங்கவே அவரை பதவியிலிருந்து நீக்கினேன் என்றும் சிறிசேனா கூறியுள்ளார்.

ரணில் காலத்தில் தான் நாடு, மிகப்பெரும் ஊழலையும், மோசடிகளையும் சந்தித்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் சிறிசேனா.

Colombo:

இலங்கை அதிபர் சிறிசேனா, "ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமாராக பதவியேற்பதை அனுமதிக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

கொழும்பு செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் '' நான் ரணிலை பிரதமராக இனி எப்போதும் என் வாழ்நாளில் ஏற்க மாட்டேன். என்னதான் அவர் சட்டப்பூர்வமாக தனது பெரும்பான்மையை நிரூபித்தாலும் அதனை நான் ஏற்கமாட்டேன்'' என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை தனது அதிபர் மாளிகையில் சந்தித்தார் சிறிசேனா. அதில் "ரணிலை நீக்கியது, புதிய பிரதமரை நியமித்தது எல்லாமே சட்டப்படி தான் நடந்தது" என்று கூறியுள்ளார். 

மேலும், மத்திய வங்கி ஊழல், ரணில் பதவியேற்று 3 மாதத்தில் வெளியானது என்றும் நாட்டுக்கு ஊழலற்ற அரசை வழங்கவே அவரை பதவியிலிருந்து நீக்கினேன் என்றும் சிறிசேனா கூறியுள்ளார்.

சிறிசேனா, தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே மீது ஊழல் புகார்களையும், ஒழுங்கற்ற நடவடிக்கை கொண்டவர் என்ற குற்றச்சாட்டையும் வைத்து வருகிறார். இவரை நீக்கிவிட்டு ராஜபக்சேவை பதவியமர்த்தியது நாட்டின் நலனுக்கானது என்றும் கூறியுள்ளார். 

ரணில், அதிபரின் அதிகாரத்தையும் பயன்படுத்த ஆரம்பித்தார். அதனால் தான் அவரை உடனடியாக நீக்கினேன். ரணில் காலத்தில் தான் நாடு, மிகப்பெரும் ஊழலையும், மோசடிகளையும் சந்தித்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

.