This Article is From Dec 30, 2019

“பெரியாரை மன்னிக்க மாட்டேன்…”- புதிய சர்ச்சையைக் கிளப்பும் பாடகி சின்மயியின் தாய்!

“தேவதாசி முறை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, மொத்த பாரத தேசத்திற்குமான சொத்து"

“பெரியாரை மன்னிக்க மாட்டேன்…”- புதிய சர்ச்சையைக் கிளப்பும் பாடகி சின்மயியின் தாய்!

"என் 45 ஆண்டு கால உழைப்பை நீங்கள் பார்ப்பீர்கள்"

பாடகி சின்மயி அவர்களின் தாய் பத்மஹாசினி, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டு, வைரமுத்துவுக்கு வழங்கப்பட இருந்த கவுரவ டாக்டர் பட்டம் பற்றி பேசினார். அப்போது அவர், தேவதாசி முறைக்கு ஆதரவாகவும் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட இருந்தது. ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வைரமுத்துவுக்கு முனைவர் பட்டம் வழங்குவதாக இருந்தது. சென்ற ஆண்டு #MeToo அலை எழுந்தபோது பாடகி சின்மயி, வைரமுத்து தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். தமிழ்த் திரையுலகையே புரட்டிப் போட்ட அந்த விவகாரம் இன்று வரை ஓயவில்லை. 

173j4ukg

என்னதான் வைரமுத்து மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், தொடர்ந்து அந்தப் பிரச்னை கனன்று கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதற்கு சின்மயி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை அதைச் சுற்ற ஆரம்பித்தன. இறுதியில் அவருக்கு பட்டம் வழங்குவது ரத்து செய்யப்பட்டது. 

இது குறித்த விவாத நிகழ்ச்சியில் பங்கெடுத்த சின்மயியின் தாயார் பத்மஹாசினி, தேவதாசி முறை பற்றி பேச்சு எழுந்தபோது, “தேவதாசி முறை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, மொத்த பாரத தேசத்திற்குமான சொத்து. அந்த முறையை ஒழித்த காரணத்திற்காக பெரியாரை என்றும் மன்னிக்க மாட்டேன்.

periyar evr ramasamy

சின்மயி விவகாரத்தில் பிஸியாக இருந்ததால் என்னால் அது குறித்து சரியாக பேச முடியவில்லை. விரைவில் இந்தியாவில் தேவதாசி முறை எப்படி இருந்தது மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒரு புத்தகம் கொண்டு வர உள்ளேன். என் 45 ஆண்டு கால உழைப்பை நீங்கள் பார்ப்பீர்கள். உங்களுக்கு அது அறிவுக் கண்ணைத் திறந்துவிடும்,” என்று பேசி சர்ச்சையைப் பற்ற வைத்துள்ளார். 

.