தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக ஓய்ந்திருக்கும் நிலையில், மீண்டும் மழை பெய்வதற்கான சூழல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம், ‘தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், வட தமிழக கடலோரப் பகுதிகளிலும் டிசம்பர் 5 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி, புதிய கிழக்குத் திசைக் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமான் அருகே, வலுகுறைந்த ஒரு தாழ்வு நிலை உள்ளது. ஆகவே, அந்தமான் தீவுகளின் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம்' என்று தகவல் கூறியுள்ளது.