Ralegan Siddhi: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேக்கான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அண்ணா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில் தனது பத்ம பூஷண் விருதை திருப்பி அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநிலத்தில் லோக் ஆயுக்த அமைப்பையும் அமல்படுத்தக் கோரி சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கடந்த புதன் கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், ராலேகான் பகுதியில் நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளை எட்டியுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு மகாராஷ்டிரா மாநில கட்சித் தலைவா்கள் கோாிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் அண்ணா ஹசாரே நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மிகமுக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி நான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.
நான் விருதுக்காக பணியாற்றுபவன் அல்ல. நாட்டுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் பணியாற்றுவதற்காக எனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது. மோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது என்று அவர் கூறியுள்ளார்.