Read in English
This Article is From Jun 19, 2019

மக்களவை பாரபட்சமின்றி இயங்கும் - சபாநாயகர் ஓம் பிர்லா

“சபையில் தங்கள் கட்சிகளின் பலத்தை பொருட்படுத்தாமல் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாப்பதாக” உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார்.

Advertisement
இந்தியா Edited by

57 வயதான ஓம் பிர்லா இதுவரையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று முறை எம்.எல்.ஏ ஆகவும், இரண்டு முறை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

New Delhi:

17-வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா இன்று பதவியேற்றுக் கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் கோட்ட தொகுதியின் எம்.பி ஆக வெற்றி பெற்றவர் ஓம் பிர்லா. பாஜக எம்.பி ஆன இவரை பாஜக மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுத்து முன்மொழிந்துள்ளது. 

57 வயதான ஓம் பிர்லா இதுவரையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று முறை எம்.எல்.ஏ ஆகவும், இரண்டு முறை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார். சபாநாயகராக பதவியேற்றபின் “சபையில் தங்கள் கட்சிகளின் பலத்தை பொருட்படுத்தாமல் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாப்பதாக” உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார்.  

வெளிப்படையான அரசாங்கத்தை நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிய சபாநாயகர், “அரசு சபையில் கூடுதல் பொறுப்புடன் இருக்கும்” என்று தெரிவித்தார். சபையின் சீரான செயல்பாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் ஒத்துழைப்புக் கோரிய  பிர்லா மத்திய அரசின் கீழ் வரும் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று என்றார். 

Advertisement