This Article is From Apr 07, 2019

காங்கிரஸ் டைட்டானிக் கப்பல் போல் மூழ்கிவிடும்: மோடி கடும் விமர்சனம்

அமேதியில் ராகுலின் புகழ் குறைந்ததன் காரணமாகவே அவர் வயநாட்டில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என மோடி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் டைட்டானிக் கப்பல் போல் மூழ்கிவிடும்: மோடி கடும் விமர்சனம்

காங்கிரஸ் பிரிவினைவாதிகளோடு இணைந்துவிட்டது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஹைலைட்ஸ்

  • டைட்டானிக் கப்பலுடன் காங்கிரஸ் கட்சியை ஒப்பிட்ட பிரதமர் மோடி
  • முன்பை விட இன்னும் மோசமான நிலைக்கு காங்கிரஸ் செல்லும்
  • அமேதியில் ராகுலின் நிலை மோசமாக உள்ளது.
Nanded (Maharashtra):

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காங்கிரஸூடன் ஒப்பிட்ட பிரதமர் மோடி, நாளுக்கு நாள் சிறிது சிறிதாக மூழ்கி வரும் காங்கிரஸ் நிரந்திரமாக இந்த உலகத்தை விட்டு அழிவதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை, என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களும் மூழ்கும் கப்பலில் உயிரை பிடித்துக் கொண்டு இருப்பது போல் இருக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பலாங்கிர் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, கடந்த மக்களவைத் தேர்தலிலே 44 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரசின் நிலை தற்போது இன்னும் பின்னோக்கி சென்றுள்ளது. அதனால், தான் சரத்பவார், ராஜீவ் சதாவ் போன்ற தலைவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.

கடந்த காலங்களில் கூட மத்தியில் பல ஆட்சிகள் இருந்தன. எனினும், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கை எடுப்பது பற்றி எந்த அரசும் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை. எல்லை தாண்டி தீவிரவாத முகாம்களை அழிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை. ஆனால், தீவிரவாதிகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் அடைக்கலம் கொடுப்பவர்களை பாதுகாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

காங்கிரஸிடம் இருந்து விலகி இருப்பதுதான் வறுமையை ஒழிக்க மிகச்சிறந்த வழி. வறுமையைப் பற்றி பேசி அரசியல் லாபம் அடை வதுதான் காங்கிரஸின் வழக்கம். காங்கிரஸ் இருக்கும் வரையில் வறுமை ஒழியாது. காங்கிரஸ் இல்லாவிட்டால், வறுமை தானாகவே காணாமல் போய்விடும்.

இந்தச் சூழ்நிலையில், தெளிவான கொள்கையுடைய, அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சிக்கும் பாடுபடக் கூடிய அரசு வேண்டுமா? அல்லது ஊழல் நிறைந்த, கொள்கை எதுவும் இல்லாத அரசு வேண்டுமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

.