বাংলায় পড়ুন Read in English
This Article is From Oct 15, 2019

'வறுமை ஒழிப்பைப் பற்றித்தான் எனது மகன் அதிகம் சிந்திப்பார்' - அபிஜித்தின் தாயார் பேட்டி!!

இந்தியாவில் பிறந்த வளர்ந்த பொருளாதார வல்லுனர் அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது தாயார் நிர்மலா பானர்ஜி NDTVக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)
Kolkata:

உலகத்தில் வறுமை ஒழிப்பைப் பற்றித்தான் தனது மகனும், நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவருமான அபிஜித் பானர்ஜி அதிகம் சிந்திப்பார் என்று அவரது தாயார் நிர்மலா பானர்ஜி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்தவரும் தற்போது அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவருமான அபிஜித் முகர்ஜிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரும் எஸ்தர் டஃப்ளோ, மைக்கேல் கிரிமியர் ஆகிய 3 பேரும் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். 

தனது மகன் நோபல் பரிசு பெறுவது குறித்து அபிஜித்தின் தாயார் நிர்மலா பானர்ஜி NDTVக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

எழுத்தளவில் இருக்கும் பொருளாதார கருத்துக்களை விட்டு எனது மகன் சற்று ஓரமாகத்தான் இருப்பார். நடைமுறையில் அனைத்து மக்களுக்கு பொருளாதாரத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பதில்தான் அபிஜித்தின் கவனம் இருக்கும். 

Advertisement

வறுமையை எப்படி கையாள்வது, இருக்கும் வளங்களை பயன்படுத்தி வறுமையை எப்படி ஒழிப்பது, அதற்கான கொள்கைகள் வகுப்பது என இவற்றில்தான் அவரது சிந்தனை அதிகம் இருக்கும். எனது மகனைப்போன்று மற்றவர்களான எஸ்தர் டஃப்ளோவும், மைக்கேல் கிரிமியரும் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி இருக்கின்றனர். 

இந்தியராக இருப்பதில்தான எனது மகன் பெருமை கொள்கிறார். சிறு வயது முதலே அபிஜித் அறிவு ஞானம் மிக்கவராக, ஒழுக்கம் உள்ளவராக இருக்கிறார். அவரை எண்ணி பெருமை அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். 

Abhijit Banerjee (pictured), Esther Duflo and Michael Kremer won the 2019 Nobel Prize for Economics

டெல்லி ஜவகர்லால் பல்கலைக் கழகம், கொல்கத்தா பல்கலைக் கழகங்களில் படித்த அபிஜித் உயர் கல்வியை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முடித்தார். தற்போது அவர் பொருளாதாரத்திற்கான சர்வதேச பேராசிரியராக அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பணியாற்றி வருகிறார். 

Advertisement
Advertisement