இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் ஐஏஎஸ் சங்கம் என்ற முறையில் முறையிடலாம். அவர்களுக்கும் உரிமை உண்டு. பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு குறையிருந்தால் முறையிடலாம். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை முறையிடும் போது, ஒரு ஐஏஎஸ்-க்கு படித்தவர்கள், நாங்கள் தான் சாதாரணமானவர்கள், எங்கோ ரோட்டில் இருந்தவர்கள், படிக்க தெரியாதவர்கள் என்று நினைக்கிறார்கள்.
இவர்கள் படித்தவர்கள் ஒரு மனுவை தயாரிக்கும் போது, அந்த மனுவில் சொல்லப்படும் வார்த்தைகளை முறையாக பயன்படுத்தியிருக்க வேண்டும். மனுவை கொடுக்க வேண்டாம் என நான் கூறவில்லை. அதில், சொல்லப்படும் வார்த்தைகள் என்ன என்பதை கண்டிப்பாக கவனம் கொள்ள வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அச்சுறுத்தும் விதமாக, மிரட்டும் விதமாக, ஒரு அரசு பணியில் உள்ள அதிகாரி அமைச்சர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அது எங்கே செல்கிறது?
இதுதொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன், இது சரியல்ல, தவறு திருத்திக்கொள்ளுங்கள். புகார்கள், குறைகள் இருந்தால் நியாயமாக கூறுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.