This Article is From Feb 13, 2019

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயுமா?- தமிழக அரசு விளக்கம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பின் பேரில், போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயுமா?- தமிழக அரசு விளக்கம்

ஒரு வாரத்துக்கு மேல் நீடித்த இந்தப் போராட்டத்தின் போது, பல ஊழியர்கள் சாலை மறியல் உள்ளிட்ட தீவிர போராட்ட வடிவை கையிலெடுத்தனர்.

ஹைலைட்ஸ்

  • ஜனவரி 22-ம் தேதி போராட்டம் ஆரம்பித்தது
  • 31-ம் தேதி போராட்டம் முடிவுக்கு வந்தது
  • போராட்டத்தை கைவிடுமாறு தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்தார்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் 22 முதல் 31 ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பின் பேரில், போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

ஒரு வாரத்துக்கு மேல் நீடித்த இந்தப் போராட்டத்தின் போது, பல ஊழியர்கள் சாலை மறியல் உள்ளிட்ட தீவிர போராட்ட வடிவை கையிலெடுத்தனர். அவர்கள் மீது தமிழக அரசு இடைநீக்க நடவடிக்கை எடுத்தது. ஆசிரியர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கையை கைவிடக் கோரி பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

இந்நிலையில் பள்ளி கல்வித் துறை, ‘வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 1,111 பேர் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது' என்று அறிவித்துள்ளது. 
 

.