This Article is From Apr 25, 2019

ஏப்ரல் 30-ம் தேதி தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்டா’..?- வானிலை மையம் விளக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Advertisement
தமிழ்நாடு Written by

இந்நிலையில் தற்போதைய வானிலை மற்றும் அடுத்த சில நாட்களுக்கான வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய வானிலை மற்றும் அடுத்த சில நாட்களுக்கான வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ‘தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெறும். 

மேலும் இது 27, 28 ஆம் தேதிகளில் புயலாக வலுப் பெற்று தற்போதைய நிலவரப்படி வடத் தமழிக கடலோரப் பகுதியையொட்டி நகரக்கூடும். இதனால், மீனவர்கள் 25, 26 தேதிகளில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும், 27, 28 ஆம் தேதிகளில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவறுத்தப்படுகிறது' என்று தகவல் தெரிவித்துள்ளார். 

Advertisement

ரெட் அலர்ட் குறித்தோ, மழை எந்தளவு பெய்யும் என்பது குறித்தோ பாலச்சந்திரன் தற்போதைக்கு எதையும் சொல்லவில்லை. அது குறித்து வரும் நாட்களில் தெளிவாக விளக்கப்படும் என்று மட்டும் தெரிவித்துள்ளார். 

Advertisement