This Article is From Dec 17, 2018

பெய்ட்டி புயல்: தமிழகத்துக்கு மழை இருக்கா, இல்லையா..?

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்

பெய்ட்டி புயல்: தமிழகத்துக்கு மழை இருக்கா, இல்லையா..?

வங்கக் கடல் பகுதியில் பெய்ட்டி புயல் உருவாகியுள்ள நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ‘மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், காக்கிநாடாவுக்குத் தெற்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது பெய்ட்டி புயல். இது தொடர்ந்து வட திசை நோக்கி நகரும். பெய்ட்டி புயல் இன்று மதியம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும்.

பெய்ட்டி புயல் காரணமாக, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

நேற்று பெய்ட்டி புயலானது, தமிழக கடற்கரையை ஒட்டிச் சென்றதால், வட திசைக் காற்று வீசியது. இதனால், வட தமிழகத்தில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக் காற்று வீசியது. நேற்று சென்னையில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது' என்று கூறினார்.

.