This Article is From Jan 29, 2019

‘அதிமுக-வில்தான் பயணிப்போம்..!’- ட்விஸ்ட் கொடுக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுக- அமமுக கட்சிகள் இணையவும் தூதுக்கள் சென்று வருவதாக பேச்சு அடிபடுகிறது. 

Advertisement
தமிழ்நாடு Posted by

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியல் களத்தில் பரபரக்கத் தொடங்கியுள்ளன

Highlights

  • தினகரனைத் தவிர யாரை வேண்டுமானாலும் சேர்க்கத் தயார், அதிமுக
  • அதிமுக-வோடு இணைய வாய்ப்பே இல்லை, தினகரன்
  • அதிமுக- அமமுக இணைய வாய்ப்பு எனத் தகவல்

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியல் களத்தில் பரபரக்கத் தொடங்கியுள்ளன. ஒரு பக்கம் திமுக-காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்துவிட்ட நிலைநில், அதிமுக-பாஜக கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அதிமுக- அமமுக கட்சிகள் இணையவும் தூதுக்கள் சென்று வருவதாக பேச்சு அடிபடுகிறது. 

இப்படி தினம் தினம், அரசியல் காய் நகர்த்தல்கள் காணப்படும் தமிழக அரசியலில் அமமுக-வின் முன்னணி நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன், ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக-வில்தான் நாங்கள் பயணிப்போம்' என்று ட்விஸ்ட் கொடுக்கும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சில நாட்களுக்கு முன்னர், ‘நாங்கள் அதிமுக-வோடு சேருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. அவர்களோடு சேர வேண்டும் என்று எங்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன், ‘எங்கள் கட்சி அதிமுக-வோடு இணைய வேண்டாம் என்பதில் தெளிவாக உள்ளது. அதே நேரத்தில் புடட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது அதிமுக என்கிற பேரமைப்பு. அதை வளர்த்தவர் புரட்சித் தலைவி அம்மா. அவர்கள் உருவாக்கிய கட்சியில்தான் நாங்கள் அனைவரும் பயணிப்போம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் வேண்டாம்' என்று குழப்பம் விதத்தில் கருத்து கூறியுள்ளார்.

Advertisement
Advertisement