Read in English
This Article is From Oct 21, 2018

இனி 50 வயதில் தான் சபரிமலைக்கு செல்வேன்! - பதாகையுடன் வந்த 9 வயது சிறுமி!

உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் அறியவில்லை. ஆனால் 50வயது ஆகாமல் என் மகள் சபரிமலை கோவிலுக்குள் போகமாட்டாள்

Advertisement
Kerala

50 வயது ஆன பிறகே சபரிமலைக்கு செல்வேன் என்ற பதாகையுடன் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 9 வயது சிறுமி ஜனனி.

Highlights

  • பெற்றோருடன் மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி சபரிமலைக்கு வருகை.
  • ஐம்பது வயதுக்கு மேல்தான் நான் சபரிமலைக்கு செல்வேன் என்று பதாகையில் எழுதப்
  • ”உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் அறியவில்லை” எனக் கூறும் சிறுமியின் பெற்றோர்.
Sabarimala, Kerala:

ஐம்பது வயதுக்கு மேல்தான் நான் சபரிமலைக்கு செல்வேன்” என்ற பதாகையுடன் வந்து எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்த மதுரையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஜனனி வெள்ளிகிழமையன்று பெற்றோருடன் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். ”உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் அறியவில்லை” எனக் கூறும் சிறுமியின் பெற்றோர் தங்களது மகளுக்கு 10 வயது ஆகிய பிறகு 50 வயது ஆகும் வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்வாள் என்றனர். ஜனனியின் தந்தையான ஆர்.சதீஷ் குமார் கூறுகையில் “எங்களது ஐயப்பனை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். எங்களது மகள் 50 வயதுக்கு முன்னாள் சபரிமலைக்கு சென்றால் ஐயப்பனுக்கு படிக்காது” என்று கூறினார்.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பலர் போராடி வரும் நிலையில் போலீஸார் உதவியுடன் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களால் சபரிமலையில் மேலும் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பம்பை முதல் சன்னிதானம் வரை போலீஸாரால் அவர்களின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 18 படிகளைத் கடக்க பெண் பக்தர்கள் உள்ளே செல்ல முயன்ற போது கோவில் அரங்காவலர்கள் மற்றும் பணி ஆட்கள் கோவிலுள்ளே அமர்ந்து வழியைக் மறைத்தனர்.

மேலும் இத்தனை தடைகளை மிறி கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் பந்தள அரண்மனை டிரஸ்ட் கோவிலை உடனே பூட்ட வேண்டும் என அரச குடும்பத்தினரிடமிருந்து தகவல் வந்துள்ளது. பெண்கள் உள்ளே வந்ததால் தந்தரி சுத்தம் செய்த பிறகே பக்தர்கள் செல்ல வேண்டும். பெண்கள் உள்ளே சென்றால் ஐயப்பன் பக்தர்கள் சபிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Advertisement
Advertisement