This Article is From Nov 05, 2018

பிரதமர் முகம் பதித்த தங்ககட்டிகள் விற்பனை

மேலும் இந்த புதிய திட்டத்தால் பலர் இதை வாங்க ஆர்வமாக வாங்க வருவதாகவும் தெரிவித்தார்

பிரதமர் முகம் பதித்த தங்ககட்டிகள் விற்பனை
Surat, Gujarat:

‘தாந்திராஸ்' எனப்படும் தீபாவளியின் முதல்நாள் வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய பகுதிகளில் ‘அட்சய திருதியை' போல இப்பண்டிகை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது தொன்று தொட்ட வழக்கமாக மக்களால் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் பிரதமரின் முகம் பதிக்கப்பட்ட இந்த தங்க கட்டிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சூரத்தில் உள்ள நகைக்கடை உரிமையார் கூறியுள்ளார்.

‘ஒவ்வொரு ஆண்டும் தாந்திராஸ் பண்டிகை நாளில் லஷ்மி மற்றும் விநாயகரை வணங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பிரதமர் மோடியின் உருவம் இடம் பெற்றுள்ள இந்த கட்டிகளை வாங்கி வழிபாடு செய்ய உள்ளோம்' என வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.
 

 

மேலும் அங்குள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் மிலான் கூறியது ‘தீபாவளி ஒரு புனித பண்டிகை ஆகும். நம் பிரதமர் நம்மை எப்பொழுதும் வளர்ச்சி பாதையில் கொண்டு போவதால் இந்த ஆண்டு அவர் உருவம் பதித்த தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது ஒரு நல்ல பலனைத் தரும்' என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புதிய திட்டத்தால் பலர் இதை வாங்க ஆர்வமாக வாங்க வருவதாகவும் தெரிவித்தார்.

.