மும்பையின் கொலாபா பகுதியில் 22.9 செ.மீ மழை பெய்தது
Mumbai: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் பெருத்த சேதத்தினை மும்பை சந்தித்து வருகிறது. மேலும், இன்று மாலை மணிக்கு 107 கி.மீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியது. இந்நிலையில் மக்களை வெளியில் செல்ல வேண்டாம் என மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே மற்றும் காவல்துறை எச்சரித்துள்ளனர்.
பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக மரங்கள், கார்கள், கூரைகள் ஆகியவற்றை புரட்டிப்போடப்பட்டுள்ளது. கொலாபாவில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியளவில் காற்றின் வேகம் மணிக்கு 107 கி.மீ ஆக அதிகரித்தது. மாலைக்குள், மும்பையின் கொலாபா பகுதியில் 22.9 செ.மீ மழை பெய்தது, சாண்டாக்ரூஸில் 8.8 செ.மீ மழை பெய்தது.
இன்றிரவு மும்பையில் மிக அதிக மழை பெய்யக்கூடும் என்றும் நாளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை மற்றும் காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காலை 6 மணி வரை நீடிக்கும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை காவல்துறையினரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்
பலத்த மழை மற்றும் தேங்கியுள்ள மழை நீர் காரணமாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் முதல் வாஷி வரையிலும், தானே செல்லும் பிரதான பாதையிலும் துறைமுக பாதையில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே ட்வீட் செய்துள்ளது.
மும்பை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் நிலைமையை ஆய்வு செய்துள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அலுவலகம் தெரிவித்துள்ளது.
“அனைவரையும் வீட்டிற்குள் இருக்குமாறு கோருகிறோம். மும்பை அதிவேக காற்று மற்றும் மிக அதிக மழையால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகனும், மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.