বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 28, 2019

போர் விமானி ஆக ’மோசமான அணுகுமுறை’ தேவைப்பட்டது! - அபிநந்தன்

தலைமுறை தலைமுறையாக விமானப்படைக்கு சேவையாற்றிய வரலாற்று சாதனை படைத்த குடும்பத்தில் இருந்து வந்தவர் விமானப்படை வீரர் அபிநந்தன்.

Advertisement
இந்தியா Edited by

விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமன் பாகிஸ்தானால் புதனன்று சிறைவைக்கப்பட்டார்.

New Delhi:

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைப்பற்றப்படுவதற்கு முன்பாக, எல்லைகட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானமான f-16 ரக விமானத்தை தாக்கி வீழ்த்தியவர் விமானப்படை வீரர் அபிநந்தன். சிறைவைக்கப்பட்ட அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப்படையில் வீரராக இருந்து வருபவர் அபிநந்தன் வர்தமன், இவர் கடந்த 2011ஆம் ஆண்டு என்டிடிவி தொலைக்காட்சிக்கு கூறியதாவது, மோசமான அணுகுமுறை "ஒரு நல்ல போர் விமானியாக இருக்க ஒரு முக்கிய தேவையாக இருந்தது என்று கூறியுள்ளார். சென்னையை சேர்ந்தவர் அபிநந்தன்.

நேற்று இந்த ராணுவ நிலையங்களை நோக்கி தாக்குதல் நடத்த முயன்ற 24 பாகிஸ்தான் போர் விமானங்களை, இந்தியாவை சேர்ந்த 7 போர் விமானங்கள் தடுத்து நிறுத்தி, பதில் தாக்குதல் மேற்கொண்டது. இதில் மிக்-21 ரக போர் விமனாத்தை இயக்கிய போர் விமானி அபிநந்தன் எல்லை கட்டுப்பாட்டுக்குள் அத்துமீறி புகுந்த பாகிஸ்தான் f-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து நடந்த பதில் தாக்குதலில் அபிநந்தன் விமானம் சிக்கியது இதில் இருந்து பாராசூட் மூலம் தப்பித்து குதித்த அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் தரையிரங்கியதால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறைவைக்கப்பட்டார்.

Advertisement

இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மத்தியில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்பது போன்றும், அவரிடம் பாக். ராணுவ வீரர்கள் கேள்வி கேட்பது போன்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து, சிறிது நேரத்தில் அபிநந்தன் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவருக்கு தேநீர் வழங்கப்பட்டு அவரை முறையாக கையாள்வது போன்ற மற்றொரு வீடியோவும் வெளியானது. அதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை முறையாக மரியாதையுடன் கையாள்வதாக அபிநந்தன் கூறுகிறார். இதனை இந்தியா சென்றாலும் மாற்றி கூறமாட்டேன் என்றார் அந்த வீடியோவும் வைரலாக பரவியது.

தலைமுறை தலைமுறையாக விமானப்படைக்கு சேவையாற்றிய வரலாற்று சாதனை படைத்த குடும்பத்தில் இருந்து வந்தவர் விமானப்படை வீரர் அபிநந்தன். அவரது தந்தை வர்தமன் 1999ல் பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் பணியாற்றியவர். அவரது தாத்தா சீமாகுட்டியும் இரண்டாம் உலகப்போரில் விமானப்படையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


 

Advertisement