பேரிடரிலிருந்து மீண்டு வருவதற்காக பாலுத்தீவில் நடத்தப்பட்ட ‘வின்னி தி போ’ நிகழ்ச்சி.
Palu: பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய சிறுவர்கள் மத்தியில் ‘வின்னி தி போ’ பாத்திரம் புன்னகையை கொண்டு வந்துள்ளது.
தன்னார்வலர்கள் பாலுத்தீவில் இருக்கும் குழந்தைகளை பாடல் மற்றும் விளையாட்டு மூலம் உற்சாகப்படுத்தியுள்ளார்கள். கடந்த செப்.28 அன்று சுலவேசி தீவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி 2000 பேரின் உயிரை பறித்துவிட்டது. மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த பேரழிவில் 1,80,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘சேவ் தி சில்ரன்’ என்ற தன்னார்வ அமைப்பு உள்ளூர் தொண்டு நிறுவனர்களுடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ’சேவ் தி சில்ரன்’ அமைப்பின் ஆலோசகர் கூறுகையில், குழந்தைகளின் அழ்மனநலனிற்கு விளையாட்டு என்பது மிகவும் இன்றியமையாதது. மேலும், பேரிடர் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வர இது போன்ற முயற்சிகள் உதவும் என்று அவர் கூறினார்.