This Article is From Dec 03, 2019

மைனசுக்கு சென்ற வெப்பநிலை! கொட்டும் பனியில் நடுங்கும் வட மாநில மக்கள்!!

இனி வரும் நாட்களில் டெல்லியின் வெப்பநிலை 7 டிகிரிக்கு செல்லும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் ஸ்ரீநகரில் மைனஸ் 2.5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

மைனசுக்கு சென்ற வெப்பநிலை! கொட்டும் பனியில் நடுங்கும் வட மாநில மக்கள்!!

காஷ்மீரின் ஸ்ரீநகரில் மைனஸ் 2.5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

New Delhi:

வட மாநிலங்களில் வீசி வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில இடங்களில் வெப்பநிலை மைனசுக்கு சென்றுள்ளது. தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 8 டிகிரியாக பதிவாகியிருக்கிறது. 

மிகக்குறைந்த பட்சமாக வட எல்லையில் அமைந்திருக்கும் 'லே (leh)' பகுதியில் வெப்பநிலை மைனஸ் 14.4- அக பதிவாகி இருக்கிறது. 

டெல்லியைப் பொறுத்தளவு காற்று மாசு அதிகரித்திருக்கும் நிலையில், குளிரும் மக்களை வதைக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அங்கு 8 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இது சராசரியைக் காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

இனி வரும் நாட்களில் டெல்லியின் வெப்பநிலை 7 டிகிரிக்கு செல்லும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் ஸ்ரீநகரில் மைனஸ் 2.5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இமாச்சல பிரதேசத்திலும் கடும் குளிர் காணப்படுகிறது. இங்கு 1-9 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை பதிவாகிறது. 

இதேபோன்று அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 7 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. மொத்தத்தில் கடும் குளிரால் வட இந்திய மாநிலங்கள் நடுக்கம் கண்டுள்ளன என்பதே தற்போதைய நிலவரம். 
 
.