Read in English
This Article is From Nov 21, 2018

குளிர்கால கூட்டத் தொடர் மாநிலங்களவையில் டிசம்பர் 11-ம் தேதி தொடக்கம்

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தை நடத்தும் தேதிகள் முடிவு செய்யப்பட்டன

Advertisement
இந்தியா

குளிர்கால கூட்டத் தொடரின்போது குறைந்தது 20 அமர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, மாநிலங்களவை வரும் டிசம்பர் 11-ம்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் குடியரசு தலைவர் மாநிலங்களவையில் உரையாற்ற உள்ளார்.

டிசம்பர் 11-ம்தேதி தொடங்கும் இந்த கூட்டம் ஜனவரி 8-ம்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத் தொடரையொட்டி குறைந்தது 20 அமர்வுகளாவது மாநிலங்களவையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவாகரத்துறை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்தும் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

வழக்கப்படி குளிர்கால கூட்டத்தொடர் முன்னதாக நடைபெற இருந்தது. ஆனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருவதால் கூட்டம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement