This Article is From Dec 21, 2018

இன்று ‘வின்டர் சோல்ஸ்டிஸ்’ தினத்தையொட்டி கூகுள் டூடுல் செய்து சிறப்பித்துள்ளது.

Winter solstice 2018: இந்நிகழ்வு, பூமியின்  வடக்கு துருவத்தில் டிசம்பர் மாதத்திலும் தென் துருவத்தில் ஜூன் மாதமும் நடைபெறும். 

இன்று ‘வின்டர் சோல்ஸ்டிஸ்’ தினத்தையொட்டி கூகுள் டூடுல் செய்து சிறப்பித்துள்ளது.

இதனால் டிசம்பர் மாத்தில் தென்துருவத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

New Delhi:

வின்டர் சோல்ஸ்டிஸ் (Winter Solstice) ஆன இன்று, பூமி சூரியனிடமிருந்து  தூரமாக இருக்கும். இந்த மாற்றத்தால் பகல் நேரம் குறைவாகவும்  இரவு நேரம் அதிகமாக இருக்கும். இதனால் ‘வின்டர் சோல்ஸ்டிஸ்' தினத்தையொட்டி  கூகுள்  புதிய டூடுல் வெளியிட்டது. 

‘சோல்ஸ்டிஸ்' என்றால் லத்தின் மொழியில்  ‘அசையாமல் இருக்கும் சூரியன்' என்று பொருள். இதனால் பகல் மற்றும் இரவின் கால அளவு மாறுபடுகிறது. வருடத்திற்க்கு இரண்டு முறை ஏற்படும் இந்த நிகழ்வுகள், பூமியின்  வடக்கு துருவத்தில் (Northern Hemisphere) டிசம்பர் மாதத்திலும் தென் துருவத்தில் (Southern Hemisphere) ஜூன் மாதமும் நடைபெறும். 

வடதுருவத்தில் நடக்கும்போது சூரியனின் தாக்கம் தெற்கில் உள்ள டிராப்பிக் ஆப் கேப்பிரிக்கான்னில் (Tropic of Capricorn) பிரதானமாக காணப்படும். இப்படி ஏற்படும் மாற்றத்தால் உலகில் உள்ள பல பகுதிகளுக்கு வேவ்வேறு சமயங்களில் சூரியனை காண முடியும்.

டிசம்பர் மாத்தில் வடதுருவம் முழுமையாக சூரியனிடமிருந்து தூரமாக காணப்படும், இதனால் தென்துருவத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

மேலும் ஸ்டோன்ஹெஞ் (Stonehenge) என்னுமிடத்தில், சூரியனின் பழமையான பொக்கிஷமாக கருதப்படும் கற்களில் விழுவதால் அங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். மேலும் அயர்லாந்து மக்கள் அங்குள்ள 5,000 வருட பழமை வாய்ந்த கல்லறை முன் கூடி சூரியன் அங்கு விழுவதைப் பார்ப்பார்கள். 

இதே வின்டர் சோல்ஸ்டிஸ்யை, சீனர்கள் டோன்க்சி திருவிழாவாக (Dongzhi Festival) கொண்டாடப்படுகிறது.  இதை அவர்களின் குடும்பத்தாருடன் இணைந்து உணவு உண்டு  இந்நாளை கொண்டாடுவார்கள் என்பது கூடுதல் தகவல்.

.