This Article is From May 05, 2020

கொரோனா சிகிச்சைக்காக 450 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனையை அமைக்கிறது விப்ரோ!!

மருத்துவமனையில் படுக்கை, டேபிள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விப்ரோ ஏற்பாடு செய்து தரும். மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்களை நியமிப்பது மகாராஷ்டிர அரசின் பொறுப்பு.

கொரோனா சிகிச்சைக்காக 450 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனையை அமைக்கிறது விப்ரோ!!

விப்ரோ நிறுவனமும் மகாராஷ்டிர அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • மகாராஷ்டிர அரசுடன் விப்ரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது
  • புனேவில் 450 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்படும்
  • மருத்துவர்கள், நர்ஸ்களை மகாராஷ்டிர அரசு மருத்துவமனைக்கு வழங்கும்
Bengaluru:

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 450 படுக்கைகளைக் கொண்ட தற்காலிக மருத்துவமனையை பிரபல ஐ.டி. நிறுவனமான விப்ரோ மகாராஷ்டிராவில் அமைக்கவுள்ளது. 

இதுதொடர்பான ஒப்பந்தம் மகாராஷ்டிர அரசுக்கும், விப்ரோ நிறுவனத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. 450 படுக்கைகளைக் கொண்டதாக புனே நகரில் அமைக்கப்படும் தற்காலிக மருத்துவமனை மே 30-ம் தேதிக்குள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். 

இந்த தகவலை விப்ரோ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. 

தற்காலிக மருத்துவமனையில் மிக அதிக பாதிப்பு இல்லாத நோயாளிகள் தங்க வைக்கப்படுவார்கள். அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்காக 12 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மையம் ஏற்படுத்தப்படவுள்ளது. 

24 மணிநேரமும் மருத்துவர்கள், பணியாளர்கள் வசதி இந்த தற்காலிக மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். 

மருத்துவமனையில் படுக்கை, டேபிள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விப்ரோ ஏற்பாடு செய்து தரும். மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்களை நியமிப்பது மகாராஷ்டிர அரசின் பொறுப்பு. 

இதுதொடர்பாக விப்ரோவின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா தொற்று நோயை அகற்ற அரசுடன் இணைந்து விப்ரோ முழுமையாக பணியாற்றும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த பேரபாயத்தை விரட்டி விட முடியும். மனிதர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்' என்று கூறியுள்ளார். 
 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths


(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.