Shanghai: அமெரிக்கா மற்றும் சீனா இடையில் வர்த்தகப் போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிப்பதும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா அதிக வரி விதிப்பதும் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த விவகாரம் தொடர்பாக பதிவிட்டிருந்த ஒரு ட்வீடை சீன அரசின் அதிகாரபூர்வ செய்தித் தாள் விமர்சனம் செய்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் டர்ம்ப், ‘சீனப் பொருட்களுக்கு மீது நாம் விதித்த வரி நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு மாதத்தில் மட்டும் சீன சந்தையில் வளர்ச்சி 27 சதவிகிதம் சரிந்துள்ளது’ என்று ட்விட்டரில் கருத்து கூறியிருந்தார்.
இதற்குத்தான் சீன செய்தித் தாள், ‘ட்ரம்ப் அவருக்கு வேண்டியவற்றை மட்டும் சொல்லிக் கொள்கிறார். உண்மைக்கு புறம்பான கருத்துகளை அவர் தெரிவிக்கிறார். இரு நாட்டுக்கும் இடையிலான விஷயத்தை தெரு முனைச் சண்டையைப் போல ட்ரம்ப் மாற்றி வருகிறார்’ என்று விமர்சித்துள்ளது.
இதுவரை ட்ரம்ப் குறித்து சீன ஊடகங்கள் நேரடியாக தாக்கி கருத்து தெரிவித்ததில்லை. ஆனால், இப்போது அப்படி செய்திருப்பது கவனம் பெறுகிறது.
சீனாவில் இறக்குமதியாகும் பல அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், தற்போது நடந்து வருவது ஒரு முறையற்ற வர்த்தகம் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார்.
இதையடுத்துதான், அவர் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவிதம் வரை வரி விதிப்பை அமல்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீன அரசு வரி விதிப்பை அதிகரித்தது.
தொடர்ந்து இரு நாட்டு அரசுகளும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகி
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)