This Article is From Jun 21, 2018

பயங்கரவாத எதிர்ப்பு பணியில் ஈடுபட என்எஸ்ஜி கமாண்டோக்கள் காஷ்மீர் விரைந்தனர்

உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு படையான தேசிய பாதுகாப்பு பணிக்கு, கமாண்டோக்காள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்

ஹைலைட்ஸ்

  • About two dozen snipers from the NSG are stationed near Srinagar
  • NSG commandos will assist security forces in anti-terror ops in Kashmir
  • Presence of NSG would help reduce casualties during ops: Officials
New Delhi:

புதுடில்லி: ஶ்ரீநகர் அருகில் முகாமிட்டிருக்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு படையான தேசிய பாதுகாப்பு பணிக்கு, கமாண்டோக்காள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமான கறுப்பு உடையில் இருந்த சிறப்பு கமாண்டோக்கள் மற்ற பாதுகாப்பு படையினருடன் ஒருங்கிணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இருபதிற்கும் மேற்பட்ட ஸ்னைப்பகர்கள் கடந்த இரண்டு வாரங்களாக இங்கு பயிற்சி பெற்றுவருகின்றனர். சில சமயங்களில், உள்துறை அமைச்சகம் உத்தரவின்படி 100 தேதிய பாதுகாப்பு படை வீரர்கள் எல்லை பாதுகப்பு படை நிலையத்தில் நிற்கவைக்கப்படுவர்.  “கடத்தல் எதிர்ப்பு பணியில் சிறப்பான பயிற்சி மேற்கொண்டுள்ளதால், விமான நிலையத்திற்கு அருகில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்” என்று மூத்த அதிகாரி தகவல் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், காஷ்மீரில் இருந்த தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பயங்கரவாத எதிர்ப்பு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்  என தகவல்கள் கிடைத்தன.

தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் பணியால், பாதுகாப்பு படையில் ஈடுபட்டிருக்கும் பிற படையினருக்கு ஆதரவாக இருக்க முடியும்.

ஜம்மு காஷ்மீர்  மக்கள் ஜனநாயக கட்சி மெஹ்பூபா மப்டியுடன் ஏற்பட்ட பிரிவினையால், பாஜக கட்சி கூட்டணியை முறித்து கொண்டது. இதனால், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் அரசு அமர்த்தப்பட்டுள்ளது.

முக்கியமான நடவடிக்கைகளின் போது, தேசிய பாதுகாப்பு படை ஸ்னைப்பர்கள் துள்ளியமான கருவிகளை வைத்திருப்பதால்,  இழப்புகளை குறைக்க முடியும் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
nsg

 

பயங்கரவாதிகள் கட்டிடங்களுக்குள் இருந்து தாக்குதல் நடத்தும் போது, எதிர்த்து போராடும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அதிக உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது போன்ற சமயங்களில் கட்டிடத்தையே தகர்க்க முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார். இந்த ஆபரேஷனை மேற்கொள்ளும் போது,  சிறப்பு தகர்பு குழு உதவியுடன் செயல்படுவர்.

கடந்த 2017 ஆம் ஆண்டில், 80 எல்லை பாதுகாப்பு வீரர்களும், 70 பொதுமக்களும் உயிர் இழந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் வரை, 30 பாதுகாப்பு படையினரும், 35 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு கமாண்டோக்கள், நாட்டின் பிற பகுதியில் ஏற்படும் கிளர்ச்சிகளை கட்டுக்குள் வைக்கவும் பயிற்சி மேற்கொள்கின்றனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

“தேவையான நவீன கருவிகள் அனைத்தும் பெற்றுள்ளனர். ஆனால், நிறைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும்” என உயர் அதிகாரி தெரிவித்தார்.


indian army

சில மாதங்களுக்கு முன்னர், சிறப்பு ஆப்ரேஷன் குழு, ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் குர்காவுனில் உள்ள மனேசர் தலைமையகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்

கடந்த சில ஆண்டுகளாக, தேசிய பாதுகாப்பு படையினர் ஜம்மு மற்றும் பஞ்சாப்பில் பயங்கரவாத எதிர்ப்பு பணிகளில் அதிகம் ஈடுபடுத்தப்படவில்லை. சில ஆப்ரேஷன்களில், இந்திய விமானப்படை கமாண்டோக்கள் மற்றும் இந்திய கப்பல்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

.