This Article is From Mar 08, 2019

அம்மா இல்லாத எங்களுக்கு மோடியே டாடியாக இருக்கிறார்! - ராஜேந்திர பாலாஜி

அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடியே டாடியாக இருந்து வழிநடத்துகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு மிகக்குறைவாக 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கிய அதிமுக, பாமகவுக்கு அதைக்காட்டிலும் அதிகமாக 7 இடங்கள் ஒதுக்கியது. இதனால், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளதாகப் பேசப்பட்டு வந்தது.

இதனிடையே, தமிழகம் வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி ஏதும் இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக இடம் பெற்றுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித் ஷா கூறும் வீடியோ வைரலாக பரவியது. ஏற்கனவே ஜெயலலிதா மறைவிற்கு பின் பாஜக தான் அதிமுகவை வழிநடத்துகிறது என்று தமிழகம் முழுவதும் மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர, ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களை தற்போது பிரதமர் நரேந்திர மோடி தான் டாடியாக இருந்து வழிநடத்துகிறார் என்றார்.

Advertisement

மேலும், இந்தியாவை மோடியே மீண்டும் ஆள வேண்டும். அதேபோல், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரவேண்டும். ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல் நாங்கள் தவித்து வருகிற இந்த நேரத்தில், பிரதமர் மோடிதான் எங்களுக்கு டாடியாக இருந்து வழிகாட்டுகிறார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். அதேபோல், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய அளவில் எல்லோரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement