ஹைலைட்ஸ்
- நெட்டிசன்கள் பலர் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்
- ஏர்டெல் நிறுவனம் இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது
New Delhi: ஏர்டெல் நிறுவனத்திடம், ஒரு பெண் வாடிக்கையாளர், 'ஒரு ஹிந்து சர்வீஸ் ரெப் உடன்தான் பேசுவேன்' என்று கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு ஏர்டெலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
பூஜா சிங் என்ற ஏர்டெல் வாடிக்கையாளர் ட்விட்டரில், 'அன்பிற்குரிய சோயப். நீங்கள் குரானை பின்பற்றுவதால் எனக்கு உங்கள் வேலை செய்யும் நெறிமுறைகள் மீது நம்பிக்கை இல்லை. எனவே, ஒரு இந்து சர்வீஸ் ரெப் உடன் பேச ஏற்பாடு செய்யவும்' என்று ஏர்டெல் நிறுவனத்துக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு ஏர்டெல் நிறுவனமும் சம்மதம் தெரிவித்தது. இதைக் கண்ட நெட்டிசன்கள் பலர், அந்தப் பெண் வாடிக்கையாளருக்கும் ஏர்டெல் நிறுவனத்துக்கும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதில் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் ஒருவர். ஒமர், 'இனி ஏர்டெல் நிறுவறனத்துக்கு ஒரு பைசா கூட கட்ட மாட்டேன்' என்று காட்டமாக ட்வீட்டியுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து ஏர்டெல், 'நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களையோ, ஊழியர்களையோ, பார்ட்னர்களையோ மதம் அல்லது சாதி ரீதியாக பிரித்துப் பார்ப்பதில்லை' என்று ட்வீட் செய்தது. இருந்தும் நெட்டிசன்கள் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.