हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 10, 2019

ஜாக்கெட் அணிந்து செல்லுங்கள் : பெண் மருத்துவருக்கு அமெரிக்க விமான நிறுவனம் வைத்த செக்

விமானப் பணிப்பெண் ஒருவர் “நீங்கள் ஜாக்கெட் ஏதும் வைத்திருந்தாள் அதை அணிந்து செல்லுங்கள் இல்லையென்றால் நீங்கள் பயணிக்க அனுமதியில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement
உலகம் (c) 2019 The Washington PostEdited by

ஏர்லைன் நிறுவனம் மன்னிப்பு கேட்டதோடு, பயணத்திற்கான முழு பணத்தையும் கொடுத்து விடுவதாக கூறியுள்ளது.

Highlights

  • பெண் மருத்துவர் 8 வயது மகனுடன் வந்திருந்தார்.
  • அவரின் உடையை காரணம் காட்டி அதன் மேல் ஜாக்கெட் ஒன்றினை அணிய வற்புறுத்தினர்
  • ஏர்லைன் நிறுவனம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

அமெரிக்காவில் ஹோஸ்டன் மாகாணாத்தை சேர்ந்த பெண் மருத்துவரும் அவருடைய 8 வயது மகனும் ஜூன் 30 அன்று ஒரு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டனர். பெண் அணிந்திருந்த உடைக்கு மேல் ஒரு தோள்பட்டையை மூடும் வண்ணம் ஜாக்கெட் அணிந்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என்று ஏர்ஹோஸ்டஸ் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் ஷானன் கில்சன் நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணி திஷா ரோவ் பயணக் கட்டணத்தை முழுவதும் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளது. ஆனால் எந்தவொரு பணமும் திரும்பக் கிடைக்கவில்லை என்று பயணி கூறியுள்ளார். 

 மருத்துவாரான் திஷா ரோவ்வும் அவரது மகனும் ஜமைக்காவில் ஒருவாரம் விடுமுறையைக் கழித்த பின்னர் மியாமி மாகாணத்திற்கு திரும்ப கிங்ஸ்டன் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் மிகவும் வியர்வையுடன் காணப்பட்டிருந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன் குளித்து பின் ஏறியுள்ளார்.  ஸ்லீவ் லெஸ்  கொண்ட குட்டையான உடையை அணிந்துள்ளார். அதனால் விமானப் பணிப்பெண் ஒருவர் “நீங்கள் ஜாக்கெட் ஏதும் வைத்திருந்தாள் அதை அணிந்து செல்லுங்கள் இல்லையென்றால் நீங்கள் பயணிக்க அனுமதியில்லை” என்று கூறியுள்ளார்.  பிரச்னையை மேலும் நீட்டிக்க விரும்பாமல் பெண் மருத்துவர் போர்வை ஒன்றினை வாங்கி அதை போர்த்திக் கொண்டு சென்று விமானத்தில் பயணித்தனர்.  

Advertisement

விமானத்தை விட்டு இறங்கும் போது மற்றொரு பெண் பயணி குட்டையான உடையை அணிந்திருந்தார். ஆனால் அவருக்கு எந்தவித தடையும் இல்லை.  அந்தப் பெண்ணுக்கு எனக்குமான ஒரே வித்தியாசம் அவர் ஒல்லியாக வெள்ளையாக இருந்தார். நான் கருப்பாக சற்று குண்டாக இருந்தது மட்டுமே. என்று கூறியுள்ளார்.

மியாமி போய் இறங்கியதும் விமானத்தில் தனக்கு நடந்ததை கூறியுள்ளார். இதற்கு அந்த ஏர்லைன் நிறுவனம் மன்னிப்பு கேட்டதோடு, பயணத்திற்கான முழு பணத்தையும் கொடுத்து விடுவதாக கூறியுள்ளது. 

Advertisement

விமானப் பயணம் முழுவதும் அந்த பெண் மருத்துவர் அவமான உணர்வுடனே பயணித்துள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement