நாய் என நினைத்து சிங்கத்திடம் மாட்டி கொண்டார் அமெரிக்காவை சேர்ந்த பெண்மனி.
அமெரிக்காவிலுள்ள இடாஹோ என்னும் மாகாணத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
அங்கு இரண்டு விலங்குகள் சண்டை போட்டு கொண்டிருந்தன. இரண்டு நாய்கள் தான் சண்டை போடுகிறது என நினைத்த ஒரு பெண் அந்த இரண்டு விலங்குகளை பிரிக்க எண்ணினார்.
அருகில் சென்ற பின் தான் தெரிந்தது அந்த விலங்குகளில் ஒன்று மலை சிங்கம் என்று.
இதற்கு சமூக வலைதளத்தில் பலர் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
‘அந்த விலங்குகளில் ஒன்று சிங்கம் என்று தெரிந்ததும் தன் கணவரிடம் விரைந்து துப்பாக்கியை கொண்டு வர சொல்லிருக்கிறார். பின் போராடி அந்த மலை சிங்கமிடம் இருந்து தப்பிட்டார் அவர்' என இடாஹோ மாகாணத்தை சேர்ந்த துறை தெரிவித்துள்ளது.
Click for more
trending news