மன அழுத்தத்தில் இருந்துள்ளார் அந்த பெண்..
Sitapur:
உத்திரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு மாத கைக்குழந்தையை வீட்டில் புதைத்து விட்டு அந்த வீட்டையே எரித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை உதவி கண்காணிப்பாளரான மதுபன் சிங் கூறியதாவது: உடல்நிலை சரியில்லாத தனது குழந்தை எந்த சிகிச்சைக்கும் சரியாகாமல் இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் அந்த பெண். தனது பெண் குழந்தை இறந்து போனதையடுத்து அதை அக்கம்பக்கத்து வீட்டாருக்கு தெரிவித்த அந்த பெண், தனது வீட்டைக் தீயிலிட்டுக் கொழுத்திவிட்டு மாயமாகியுள்ளார்.
மேலும் பேசிய அவர் அந்தக் குழந்தையின் உடலை கைப்பற்றி விட்டதாகவும் மேலும் வீட்டைத் தீயில் கொழுத்திய அந்த பெண்ணைக் கைது செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
"அந்தப் பெண்ணின் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். மேலும் அப்பெண்ணைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றோம்," என்றார் காவல்துறை உதவி கண்காணிப்பாளரான மதுபன் சிங்.
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.