Read in English
This Article is From Jul 31, 2018

ஆம்புலன்சுக்காக 12கி.மீ தூக்கிச்செல்லப்பட்ட கர்ப்பிணி, வழியிலேயே பிறந்த குழந்தை மரணம்

மூங்கில் கழியோடு கயிற்றால் இணைத்த கூடையில் அமர வைத்து 12கிமீ தொலைவுக்கு கர்ப்பிணி மனைவியைக் கணவன் தூக்கிச் செல்லும் மனதை உருக்கும் காட்சி.

Advertisement
தெற்கு

Highlights

  • கடும் இரத்தப்போக்குக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
  • ஜிந்தம்மா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
  • கணவரும் பிறரும் சேர்ந்து அவரை 12கிலோமீட்டர் தூக்கிச் சென்றனர்.
Hyderabad:

ஆந்திராவைச் சேர்ந்த 22வயதான பெண் ஜிந்தம்மா. இவர் எட்டு மாத கர்ப்பிணி. இவருக்குத் திடீரென பிரசவ வலி ஏற்படவே கணவரும் பிற கிராமத்தினரும், ஆம்புலன்சு கிடைப்பதற்காக 12கிமீ காட்டுப்பாதையில் தூக்கிச் சென்றுள்ளனர். ஆம்புலன்ஸ் கிடைக்கும் முன்பே ஈன்ற குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

மருத்துவ வசதிக்காக 12கிமீ மூங்கில் கழியுடன் கயிற்றாலும் சேலையாலும் கட்டப்பட்ட கூடையில் உட்கார வைக்கப்பட்டு கர்ப்பிணியைத் தூக்கிச் செல்லும் காட்சி காண்போரைத் துன்பத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.

கணவர் அயர்ச்சி அடைந்தால் தூக்கிச்செல்ல பின்னால் கிராமத்தினர் தொடர்ந்து வந்தபடி இருந்தனர். இந்நிலையில் வலி அதிகமாகவே வழியிலேயே குழந்தையை ஈன்றார். சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. இரு குழந்தைகளுக்கான ஜிந்தம்மா கடும் இரத்தப்போக்கு ஏற்பட்டதையடுத்து தற்போது ஜிந்தம்ம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ஆந்திராவில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் விஜயநகரம் வட்டாரத்தில் இத்தகைய சம்பவங்கள் புதிதில்ல. சரியான சாலை வசதிகளற்ற கரடு முரடான பாதைகள் அடங்கிய பகுதியாக இது உள்ளது.

இப்பகுதியில் மருத்துவ வசதிகளும் அதை அணுக சரியான சாலை வசதிகளும் இல்லாத விவகாரத்தை நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கையில் எடுத்துள்ளார். மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதையும் ஏற்படுத்தாமல் பெரிய கட்சிகள் ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நடைறவுள்ள பொதுத்தேர்தலில் அவரது கட்சி இப்பகுதியில் போட்டியிட முடிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement