Read in English
This Article is From Jul 26, 2018

சீன பெண்ணின் உடலில் 3000 சிறுநீரக கற்கள் - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

மருத்துவ சிகிச்சைக்கு வந்த பெண்ணின் உடலில், 3000 சிறுநீரக கற்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்

Advertisement
விசித்திரம்

சீனா நாட்டில், மருத்துவ சிகிச்சைக்கு வந்த பெண்ணின் உடலில், 3000 சிறுநீரக கற்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனா சங்ஷொவ் பகுதியை சேர்ந்த 56 வயது பெண், தொடர்ந்து காய்ச்சல், உடல் வலி போன்ற காரணங்களால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுநீரகத்தில் 3000 கற்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

ஒரு மணி நேரம் பரிசோதனைக்கு பிறகு, வலதுப்புற சிறுநீரகத்தில் 2.980 கற்கள் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். எனினும், தரமான மருத்துவ சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் நீக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

உலகிலேயே அதிக சிறுநீரக கற்கள் நீக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தன்ராஜ் என்பவருக்கு செய்யப்பட்டுள்ளது. உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த இந்த அறுவை சிகிச்சையில், 1,72,155 கற்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
 

Advertisement
Advertisement