விபத்து நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம்
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு சின்ன சிலந்தி மிக பெரிய விபத்திற்கு காரணமாக அமைந்தது. பெண் ஒருவர் தன் காரில் சிலந்தியை பார்த்த பயத்தில் காரை தடுப்பு சுவரில் மோதினார். இதனால் அந்த பெண்மனிக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இது குறித்து காவல்துறையினர், ‘ஓட்டுநர் இடத்தில் சிலந்தியை பார்த்ததால் பயந்த பெண், காரின் கட்டுபாட்டை இழந்தார். அதனால் கார் விபத்துக்குள்ளானது' என்றனர்.
இந்த விபத்தின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பலர் தங்களது கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.
‘அந்த சிலந்தி இறந்து விட்டதா என்பதை உறுதி செய்ய, காரை எரித்து விடுங்கள்' என ஒருவர் கமண்ட் செய்துள்ளார்.
‘சிலந்தியை கண்டு நானும் பயந்துள்ளேன். ஆனால் காரின் கட்டுபாட்டை நான் இழக்கவில்லை' என மற்றொருவர் கமண்ட் செய்திருந்தார்.
விபத்துகுள்ளான பெண்மனி விரைவில் நலமாக வேண்டுமென பலர் கமண்ட் செய்தனர்.
Click for more
trending news