This Article is From May 06, 2020

போலீஸ் உதவியுடன், உடைந்த காலில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்!

தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக உள்ளனர்.

Advertisement
News

ஜோத்பூரில் ஒரு பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காரில் பிரசவித்தார்.

ஜோத்பூரின் அகிலியா என்ற இடத்துக்கு அருகே பெண் ஒருவர், போலீஸ் கான்ஸ்டபிள்களின் உதவியுடன் காரில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது கார் உடைந்து விழுந்ததை அடுத்து, காரில் குழந்தைப் பிறந்தது என்று ராஜஸ்தான் (மேற்கு) துணை போலீஸ் கமிஷனர் பிரீத்தி சந்திரா தெரிவித்தார்.

“மே 4ம் தேதி, ஒரு பெண் தனது கணவருடன் பார்மர் மாவட்டத்திலிருந்து ஜோத்பூருக்கு பிரசவத்திற்காகச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஜோத்பூரின் அகிலியா அருகில் கார் உடைந்தது. அப்போது அந்த பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் மருத்துவர் மற்றும் நர்ஸ் ஆகியோருக்கு அழைத்து தகவல் தெரிவித்தார். ஆனால், அவர்கள் அந்த இடத்துக்கு வருவதற்கு முன்பு, கான்ஸ்டபிள் உதவியுடன் குழந்தையைப் பெற்றெடுத்தார்,” என்று சந்திரா கூறினார்.

தாய் மற்றும் குழந்தை பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Advertisement