This Article is From Oct 10, 2019

‘One-Rupee Clinic’-ல் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்- நெஞ்சை உருகவைக்கும் சம்பவம்!

ஒரு ரூபாய் கிளினிக் (One-Rupee Clinic) என்று சொல்லப்படும் அந்த விசேஷ மருத்துவமனையில் ரயில்வே அதிகாரிகளே சுபந்தியை சேர்த்துள்ளனர்

‘One-Rupee Clinic’-ல் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்- நெஞ்சை உருகவைக்கும் சம்பவம்!

one-rupee clinic: தானே ரயில்வே நிலையத்தில் (Thane railway station) இருந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Mumbai:

மும்பைக்கு (Mumbai) ரயில் மூலம் பயணம் செய்த சுபந்தி பத்ரா (Subhanti Patra) என்னும் 29 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தானே ரயில்வே நிலையத்தில் (Thane railway station) இருந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஒரு ரூபாய் கிளினிக் (One-Rupee Clinic) என்று சொல்லப்படும் அந்த விசேஷ மருத்துவமனையில் ரயில்வே அதிகாரிகளே சுபந்தியை சேர்த்துள்ளனர். தானே ரயில்வே நிலையத்தின் 2வது எண் நடைமேடையில் இந்த பிரத்யேக மருத்துவமனை அமைந்துள்ளது. 

இந்த 1 ரூபாய் மருத்துவமனைக்கு மருத்துவர் ராகுல் குலே என்பவர், சிஇஓ-வாக இருக்கிறார். தனியார் அமைப்பால் இந்த மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது. 

“தாயும் சேயும் நலமாக உள்ளனர். தற்போது அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று ராகுல் தகவல் தெரிவித்துள்ளார். 

மத்திய ரயில்வே, சில காலங்களுக்கு முன்னர் இந்த ஒரு ரூபாய் கிளினிக் திட்டத்தை பெரிய ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்தது. இந்த சிறப்பு கிளினிக்களில் மருத்துவர்கள், 1 ரூபாய் ஊதியத்துக்கு மக்களுக்கு சேவையாற்றுவார்கள்.

“ஒரு அவசர நேரத்தில் இந்த கிளினிக்கின் முக்கியத்துவம் என்ன என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இதைப் போன்ற அவசர மருத்துவமனைகளை செயல்படுவதற்கு அனுமதி அளித்த ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ராகுல். 


 

.