This Article is From Oct 23, 2019

லிஃப்டிற்கு இடையே சிக்கிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

ஆர்த்தி பர்தேசி என்ற அந்த பெண் வீட்டு வேலை செய்து வருகிறார். அவர் வேலை செய்யும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிஃப்டில் இரண்டு தளங்களுக்கும் இடையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

லிஃப்டிற்கு இடையே சிக்கிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

அந்த குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார் அந்த பெண். . (Representational)

Mumbai:

மும்பையில், 45 வயது பெண் ஒருவர் லிஃப்டிற்கும் சுவருக்கும் இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி கூறும்போது, ஆர்த்தி பர்தேசி என்ற அந்த பெண் வீட்டு வேலை செய்து வருகிறார். அவர் வேலை செய்யும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிஃப்டில் இரண்டு தளங்களுக்கும் இடையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று, ஆர்த்தி நாயை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்றுள்ளார். அப்போது நாய், லிஃப்டிற்குள் திடீரென ஏறியுள்ளது, நாயை பிடிக்க ஆர்த்தியும் லிஃப்டிற்குள் ஏற முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக லிஃப்டிற்கும் சுவருக்கும் இடையே ஆர்த்தி சிக்கியுள்ளார்.  

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், நீண்ட போராட்டத்திற்கு பின் ஆர்த்தியை லிஃப்ட்டில் இருந்து மீட்டுள்ளனர்.

தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் அங்கு அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 


 

.