This Article is From Aug 27, 2019

பால்கனியில் தலைகீழாக யோகா செய்த பெண் : கீழே விழுந்து 110 எலும்புகள் உடைந்த பரிதாபம்

பெண்ணின் முழங்கால்கள் மற்றும் கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் 3 ஆண்டுகள் வரை நடக்க முடியாமல் போகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பால்கனியில் தலைகீழாக யோகா செய்த பெண் : கீழே விழுந்து 110 எலும்புகள் உடைந்த பரிதாபம்

6வது மாடியிலிருந்து இந்த பெண் கீழே விழுந்துள்ளார்.

மெக்ஸிக்கோவில் கல்லூரி மாணவி அபாயகரமான யோகாவை பயிற்சி செய்து கொண்டிருந்த போது  சமநிலையை இழந்து  80 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து விட்டார். 

அபார்ட்மெண்ட் பால்கனியில் தலைகீழாக யோகா செய்துள்ளார். அந்த பெண் தலை கீழாக தொங்கும் படம் இணையத்தில் வெகுவாக வைரலாகியது. 

நியூஸ்.காம் கொடுத்த செய்தியின் படி,  மதியம் 1.10 மணியளவில் கீழே விழுந்துள்ளார். புகைப்படம் அவரின் நண்பரால் எடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்து நடந்ததும் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் 11 மணிநேரம்  அறுவை சிகிச்சை நீடித்துள்ளது.  பெண்ணின் முழங்கால்கள் மற்றும் கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் 3 ஆண்டுகள் வரை நடக்க முடியாமல் போகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த விபத்தில் 110 எலும்புகள் உடைந்ததாகவும் இடுப்பு மற்றும் தலை முறிந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த பெண்ணின் குடும்பத்தினர் இரத்த தானம் செய்யுமாறு சமூக ஊடகத்தில் வேண்டுகோள் விடுத்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்ய கையெழுத்திட்டுள்ளதாகவும் டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.  பெண்ணின் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. 

Click for more trending news


.