हिंदी में पढ़ें
This Article is From Aug 06, 2020

டாய்லெட்டுக்குள் புகுந்த பாம்பு; அதிர்ச்சியடைந்த பெண்... அடுத்து என்ன நடந்தது..?

40 நிமிடங்கள் போராட்டத்திற்குப் பின் பாம்பு வெளியே எடுக்கப்பட்டது.

Advertisement
விசித்திரம் Edited by

டாய்லெட்டுக்குள் புகுந்த பாம்பு

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் டாய்லெட்டுக்குள் பாம்பு புகுந்ததால், பெண் அதிர்ச்சியடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மிரந்தா ஸ்டீவர்ட். இவர் தனது அறையிலுள்ள டாய்லெட்டில் ஃபிளெஷ் செய்வதற்காக தண்ணீர் பொத்தானை அமுக்க முயன்றுள்ளார்.

அப்போது தண்ணீர் நிரம்பியிருக்கும் ஃபிளஷ் பெட்டியில் ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்தார். பின்னர் உற்று நோக்கிய போது அதில் பாம்பு ஒன்று புகுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தனது நண்பர் ஓருவருக்கும், அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கும் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து ஸ்டீவர்டின் நண்பர் டாய்லெட்டுக்குச் சென்று பாம்பு இருப்பதை உறுதி செய்தார். பின்பு, 40 நிமிடங்கள் போராட்டத்திற்குப் பிறகு லாவகமாக அதன் வாலைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியே எடுத்தப் பிறகுதான் அது 10 அடி நீளமுள்ள பாம்பு என்பது தெரியவந்தது. 

 

இதனை வீடியோ எடுத்த ஸ்டீவர்ட், தனது இன்ஸ்டாகிராமிலும், சமூகவலைதளங்களிலும் பதிவிட்டார். டாய்லெட்டுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பெண்மணியை ஒருவழியாக்கி விட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு தினமும் வீடு முழுவதும் ஒரு சோதனையிட்ட பிறகுதான் உறங்க செல்கிறாராம்.

Advertisement
Advertisement