This Article is From Jul 26, 2018

டெக்சாஸ் உணவகத்தில் பிறந்த அதிசய குழந்தை - வைரல் பதிவு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உணவகத்தின் கழிவறையில் கர்ப்பிணி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது

டெக்சாஸ் உணவகத்தில் பிறந்த அதிசய குழந்தை - வைரல் பதிவு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உணவகத்தின் கழிவறையில் கர்ப்பிணி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மேகி என்ற நிறை மாத கர்ப்பிணி பெண், தனது கணவர் ராபர்ட் க்ரிப்பினின் உடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சிக்-ஃபில் உணவகத்தில் இருந்த நண்பரிடம் தனது மூத்த மகளை விட்டுச்செல்ல இறங்கி உள்ளனர். அந்த உணவகத்தில் இருந்த கழிவறைக்கு சென்ற மேகி, சிறிது நேரத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். பதட்டத்தில் சென்று பார்த்த கணவர் ராபர்ட்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

 
 

வயிற்று வலியால், உடனடியாக மேகிக்கு பிரசவம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, 911 மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் நேரம் குறைவாக இருந்ததால், கழிவறையிலேயே, தனது மனைவிக்கு ராபர்ட் பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ளது. தாயும் நலமாக உள்ளதாக ராபர்ட் தெரிவித்தார். செய்தி அறிந்து, சிக்-ஃபில் உணவகத்திற்கு விரைந்த மருத்துவ குழு, குழந்தையையும் தாயையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்

சிக்-ஃபில் உணவகத்தில் நடந்த இந்த அதிசய நிகழ்ச்சியை விவரித்து முகநூலில் ராபர்ட் பதிவிட்டிருந்தார். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்த பதிவை லைக் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘கிரேஸ்லின் மே வைலட் க்ரிப்பின்’ என அந்த பெண் குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது. உணவகத்தில் பிறந்த இந்த அதிசய குழந்தைக்கு,  சிக்-ஃபில் உணவகத்தில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக சாப்பிடும் சலுகை, பரிசாக அளிக்கப்பட்டுள்ளது என உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, குழந்தை வளர்ந்து பணிபுரியும் வயதை அடையும் போது சிக்-ஃபில் உணவகத்தில் முதல் வேலை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

 
 

 

Click for more trending news


.