நீச்சல் குளத்தில் 7 அடி முதலை!
புளோரிடா பெண் ஒருவர் சனிக்கிழமை அதிகாலையில் தனது உள் முற்றத்தில் சத்தம் கேட்டு எழுந்துள்ளார். என்ன வென்று சென்று பார்த்தால், தனது நீச்சல் குளத்தில் 7 அடி முதலை. பார்த்ததும் அதிர்ச்சி, ஆமாம், பின் 7 அடி முதலையை தன் நீச்சல் குளத்தில் பார்த்தால் யார்தான் அதிரிச்சியடைய மாட்டார்கள்!
போர்ட் சார்லோட்டை சேர்ந்த கெர்ரி கிப்பே (Kerri Kibbe) இந்த சம்பவம் குறித்து சி.என்.எனிற்கு பேட்டியளித்தபோது ''இந்த சம்பவம் இயற்கைக்கு மாறானது" என கூறியிருந்தார்.
"இது மிகவும் இயற்கைக்கு மாறானது," என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில் "அந்த முதலை வெளியேறியிருந்தாலும், இன்னும் எனக்கு வெளியே செல்ல அச்சமாகவே உள்ளது." எனக் கூறியிருந்தார்.
அந்த பெண் தனது நீச்சல் குளத்தில் ஊடுருவிய அந்த முதலையில் படங்களையும் படங்களை முகநூலில் பகிர்ந்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை சுனார் 2 மணிக்கு முதலை நீச்சல் குளத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, கிப்பே காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அழைப்பு விடுத்து இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பின்னர். காவல்துறையினர் ஒரு தனியார் முதலை பிடிப்பவரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து முதலை பிடிக்க வெண்டுகோள் விடுத்தனர்.
15 வயது என மதிப்பிடப்பட்ட அந்த முதலை, பின்னர் குளத்தில் இருந்து முதலை பிடிப்பவரால் மீட்கப்பட்டது.
அந்த முதலை தற்போது ஒரு பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டு இனச்சேர்க்கைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
"நான் நகரத்தின் நடுவில் வசிக்கிறேன், ஆனால் இது இன்னும் ஒரு காடு போலவே உள்ளது" என்று கிப்பே சி.என்.எனிற்கு கூறினார். "நான் ஓநாய்கள், பாப்காட்கள், பாம்புகள், கோபர் ஆமைகள், பருந்துகள், ஆந்தைகள், முயல்கள் என அனைத்தையும் பார்த்துள்ளேன்." என அவர் கூறினார்.
புளோரிடாவில் முதலைகள் குளங்களில் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது, ஒரு ஆர்லாண்டோ மனிதர் தனது நீச்சல் குளத்தில் 6 அடி முதலை ஒன்றைக் கண்டுபிடித்தார்.
Click for more
trending news