ஜேமி செக்லியா என்ற பெண் உயிருள்ள ஆக்டோபஸை தன் முகத்தில் வைத்தபடி புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார். அந்த படம் விளையாட்டாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மாறாக அந்த பெண்ணுக்கு மருத்துவமனைக்கு அவசர அறைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.
ஃபாக்ச் நியூஸ் கொடுத்த செய்தியின் படி வாஷிங்டன்னைச் சேர்ந்த 45 வயதான பெண் டகோமா நரோஸ் என்னுமிடத்தில் மீன்பிடி போட்டியில் பங்கேற்றுள்ளார். அதில் பிடித்த ஆக்டோபஸை வைத்து புகைப்படம் எடுத்து போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஆக்டோபஸை தன் முகத்தில் வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கத் தொடங்கியுள்ளார். சிறிது நேரத்தில் ஆக்டோபஸ் நாடியை பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன்பின் கண்ணம், கண் என அனைத்தையும் பிடித்து இறுக்கத் தொடங்கியுள்ளது. வலியில் கத்த தொடங்கியுள்ளார் அந்த பெண்.
பாதிக்கப்பட்ட பெண் பாக்ஸ் நியூஸிடம் பேசிய போது, தன்னை அரைமணி நேரம் ஆக்டோபஸ் முகத்தை கடித்துக் கொண்டிருந்ததாகவும் வலி மற்றும் கடியினால் இரத்த போக்கும் ஏற்பட்டுள்ளது. ஆக்டோபஸ் தன்னை கடிக்கும் புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்னும் தன்னால் சரியாக உணவை சாப்பிட முடியாது என்றும் கண்களை திறந்தால் மங்கலாகவே காட்சிகள் தெரிவதாகவும். தன் முகத்தின் ஒரு புறம் உணர்ச்சியின்றி முடங்கி விட்டது போல் உணர்வதாக தெரிவித்தார்.
Click for more
trending news